ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்துவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டங்களில் சென்னை - பஞ்சாப், கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவுகளைப் பொருத்தே பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும் அணிகள் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
இதுவரையிலான ஆட்டங்களின் முடிவில் பஞ்சாப், தில்லி அணிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் ஐபிஎல் தற்போது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மொஹாலியில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள சென்னையை சந்திக்கிறது. பஞ்சாபை பொருத்தவரை ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்து விட்டது. அதனால், இழப்பதற்கு எதுவும் இல்லை. வேண்டுமானால் சென்னைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம்.
ஆனால், சென்னையின் கதை வேறு. வென்றால் முதலிரண்டு இடங்களில் நீடிக்கிலாம். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ராய்ப்பூரில் நடந்த தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்களில் சுருண்ட சென்னை, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டுவைன் ஸ்மித், மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, டூ ஃபிளெஸ்ஸிஸ், தோனி, பிராவோ என பேட்டிங்கில் ஒரு பட்டாளமே இருந்தும், இமாலய ஸ்கோரை எட்ட முடியவில்லை. உன்னிப்பாக கவனித்தால் இந்தத் தொடரில் மெக்கல்லம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஆட்டங்களில் எல்லாம் சென்னையின் மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டுள்ளது. எனவே பஞ்சாபுக்கு எதிராக மெக்கல்லம் நிலையான தொடக்கம் ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.
பந்துவீச்சைப் பொருத்தவரை ஆஷிஸ் நெஹ்ரா, மோஹித் சர்மா ஆகியோருடன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனர்.
இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய முந்தைய ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றிருப்பதால், இந்த முறையும் அதுபோன்றதொரு முடிவை எதிர்பார்க்கலாம்.
""பஞ்சாப் அணிக்கு எந்த நெருக்கடியும் இல்லாததால் பயமின்றி எங்களை எதிர்கொள்ளும். அதோடு அந்த அணியில் அபாயகரமான வீரர்கள் உள்ளனர். எனவே எங்களுக்குத்தான் இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால், நாங்கள் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முயற்சிப்போம்''
ஸ்டீபன் ஃபிளமிங், சென்னை பயிற்சியாளர்.
நேரம்: மாலை 4 மணி
இடம்: மொஹாலி
நடப்பு சாம்பியனுக்கு வாய்ப்பு எப்படி?
மும்பையில் நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா, ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. பிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்த இரு அணிகளுக்குமே இது கடைசி வாய்ப்பு என்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
கம்பீர் தலைமையிலான கொல்கத்தா வியாழக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்கத் தவறியதால், தற்போது அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததும், பேட்டிங்கின்போது தேர்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டத்தை முடித்து வைக்காததுமே கொல்கத்தாவின் தோல்விக்குக் காரணம். இதை அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, கொல்கத்தா அணி இந்த தவறுகளைத் திருத்தி புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் என நம்பலாம்.
ராஜஸ்தானைப் பொருத்தவரை இந்தத் தொடரின் ஆரம்பத்தில் தொடந்து வெற்றிகளைக் குவித்து வந்தது. ஆனால், கடைசி நான்கு ஆட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. மழையால் இரண்டு ஆட்டங்கள் பாதிக்கப்பட, ஹைதராபாத், சென்னைக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
ராஜஸ்தான் பேட்டிங் வலுவாக இருந்தபோதிலும், கடைசி நேர பந்துவீச்சில் அவர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். இதை சரிசெய்ய வேண்டும் என்று அணியின் ஆலோசகர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். திராவிட் சொன்னது நிறைவேறும் பட்சத்தில் கொல்கத்தாவுக்கு சவால் காத்திருக்கிறது.
நேரம்: இரவு 8 மணி, இடம்: மும்பை

Tidak ada komentar:
Posting Komentar